மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது இந்த புயலால் நகரின் பல பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது 13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து கொண்டு இருக்கிறது புயல் காரணமாக சென்னையில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த புயல் நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காட்சியளிக்கிறது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுருத்தப் பட்டிருக்கின்றனர் புயலால் சென்னையில் மரங்கள் விழுந்து கிடக்கும் காட்சி