தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்


”தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்”



அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.




டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.


தற்போது,
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,



டிச.5, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.



அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு- மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம்



கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக
நாலுமுக்கு,ஊத்து (திருநெல்வேலி)- 5 செ.மீ மழை பதிவு



வானிலை அறிவிப்பை தெரிந்து கொண்டு,அதற்க்கு ஏற்ப செயல்படுங்கள்