உலக பென்குயின் தினம்..பென்குயின்களில் இத்தனை வகையா? பேரரசர் பென்குயின்: மிகப்பெரிய பென்குயின் இனம், அண்டார்டிகாவை பூர்வீகமாகக் கொண்டது கிங் பென்குயின்: இரண்டாவது பெரிய பென்குயின். தெற்கு அட்லாண்டிக், தென் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படுகின்றன அடேலி பென்குயின்: அண்டார்டிக் கடற்கரையில் வசிக்கும் இவை கிரில் மற்றும் மீன்களை உண்கின்றன சின்ஸ்ட்ராப் பென்குயின்: தெற்கு பசிபிக், அண்டார்டிக் பெருங்கடல்களில் உள்ள தீவுகள் மற்றும் கரையோரங்களில் வாழ்கிறது சிறிய பென்குயின்: நியூசிலாந்தில் காணப்படும் இவை தேவதை பெங்குயின் அல்லது நீல பெங்குயின் என்றும் அழைக்கப்படுகிறது மாகெல்லானிக் பென்குயின்: அர்ஜென்டினா, சிலி மற்றும் பால்க்லாந்து தீவுகளில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன ஆப்பிரிக்க பென்குயின்: தென்னாப்பிரிக்க நீர்நிலைகளில் மட்டுமே இவை வாழ்கிறது கலபகோஸ் பென்குயின்: கலாப்கோஸ் தீவுகள், ஈக்வடாரில் காணப்படும் இவை பாதுகாப்பிற்காக குகைகளில் கூடு கட்டுகின்றன ஃபியோர்ட்லேண்ட் பென்குயின்: இவை நியூசிலாந்தின், தென் தீவு, ஸ்டீவர்ட் தீவின் தென்மேற்கு கடற்கரையில் இனப்பெருக்கம் செய்கின்றன