பிரிட்ஜ் வெடிக்க காரணம் என்ன? பாதுகாப்பா இருக்க என்ன செய்யணும்?

Published by: விஜய் ராஜேந்திரன்

பிரிட்ஜ் பராமரிப்பு

பிரிட்ஜை நாம் பாதுகாப்பாக கையாள்வதும், பராமரிப்பதும் மிக அவசியம்

கேஸ் லீக்

பிரிட்ஜை நகர்த்தும்போது பின்புறத்தில் உள்ள மெல்லிய பைப் லைன்களில் கீறல் விழுந்து கேஸ் லீக் ஆகி வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பிரிட்ஜை நகர்த்தும்போது கவனம்

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பிரிட்ஜை நகர்த்தும்போது பிரிட்ஜிற்கு 30 நிமிடம் ஓய்வு கொடுத்துவிட்டு கழட்ட வேண்டும்.
அதே போல் அதனை ஆன் செய்யும் போது 30 நிமிடம் சீராக ஒரே இடத்தில் வைத்துவிட்டு ஆன் செய்ய வேண்டும்

பிரிட்ஜ் சுத்தம் செய்வது எப்படி

பிரிட்ஜை கெமிக்கல்கள் கொண்டு சுத்தம் செய்யாமல், சாதாரண வீரியம் குறைவான லோஷன் கொண்டு சுத்தம் செய்தால் பாதிப்பு ஏற்படாது

இடைவெளி

சுவருக்கும் - பிரிட்ஜிற்கும் போதுமான அளவு இடைவெளி இருக்க வேண்டும்

பிரிட்ஜ் பின் புறம்

குழந்தைகள் குளிர்சாதன பெட்டி பின் புறத்தில் செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்கள் அங்கு சென்று விளையாடும் அளவுக்கு அமைப்பு இருக்கக்கூடாது

ஏசி,வெப்பமான இடத்தில்

பிரிட்ஜை வெப்பமான இடத்தில் வைக்கக்கூடாது, ஏசி பயன்படுத்தும் அறையில் பிரிட்ஜை பயன்படுத்தக்கூடாது