சப்பாத்தி சூடாகவும், ஸ்ஃப்டாகவும் இருக்க வேண்டும் என ஹாட் பாக்ஸில் வைக்கும்போது சில நேரங்களில்  அப்படி இருக்காது.



சப்பாத்தி ஸ்டோர் செய்யும்போது காட்டன் துணியை பாத்திரத்தில் வைத்து அதில் சப்பாத்தியை ஆறியதும் வைத்து துணியால் மூடிவிடவும்.



சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டும் என்றால் சுடுதண்ணீர் ஊற்றி மாவு பிசைந்தால் உதவும்.



சப்பாத்தி சுட்டவுடன் அதை உடனே டப்பா/ ஹாட் பாக்ஸில் வைக்க வேண்டும். தனியே ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆறியதும் டப்பாவில் வைக்கவும்.



சுட சுட இருக்கும் சப்பாத்தியை ஹாட் பாக்ஸில் வைக்க கூடாது. சப்பாத்தியில் இருந்து நீராவியுடன் மூடி வைத்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்காது.



சப்பாத்தியின் அளவை விட பெரிய டப்பா/ ஹாட் பாக்ஸ் ஆகியவற்றை தேர்வு செய்யவும். சப்பாத்தியின் அளவை விட அதிகமாக இருப்பதால் நீராவி வெளியேற உதவும். 



அதன்மீது துணி வைத்து சப்பாத்தியை ஸ்டோர் செய்து, மீண்டும் துணியால் மூடி ஸ்டோர் செய்தால் சப்பாத்தி நல்ல மிருதுவாக இருக்கும். 



சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டுமானால், அலுமினியம் ஃபாயில் அல்லது பட்டர் பேப்பர் உதவியுடன் ஸ்டோர் செய்வது நல்லது. 



இதோடு சப்பாத்தி பால், எண்ணெய் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்க வேண்டும்.



சப்பாத்தி ஸ்டோர் செய்யும்போது காட்டன் துணியை பாத்திரத்தில் வைக்கலாம்.