உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காய் உதவுமா?நிபுணர் பரிந்துரைகள்!

Published by: ஜான்சி ராணி


அதிக கெட்ட கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள், ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் ஆகியவற்றை  தவிக்க வேண்டும்.



வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது.



உடலிலுள்ள நச்சுக்களை நீக்கும் பணியை சிறப்பாக செய்கிறது வெள்ளரிக்காய்.



வெள்ளரிக்காய் ஜூஸ் அல்லது தண்ணீரில் வெள்ளரிக்காய் சேர்த்து அதை குடிப்பது உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கு நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.



வெள்ளரிக்காயில் உள்ள erepsin என்ற பொருள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.



வெள்ளரிக்காய் புத்துணர்ச்சி தரும் ஒன்றாக இருக்கும். இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கும் பண்புகளை பெற்றுள்ளது



தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்க உதவும்.



உடலின் வளர்சிதை மாற்றம் சரியாக இருந்தாலே குடல் ஆரோக்கியம், உணவு செரிமானம் எல்லாம் சீராக இருக்கும். 



காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் தண்ணீரை குடிக்கலாம். அடிக்கடி குடித்தாலும் அளவுடன் குடிக்க வேண்டும்.