புத்திசாலிகள் தனியாகவே இருக்க விரும்புவது ஏன்? திறமைகள், நல்ல குணங்களை கொண்டவர்கள் பெரும்பாலும் தனிமையை அதிகம் விரும்புவதாக கருதப்படுகிறது அவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் மற்றவர்களும் தங்களைப் போலவே ஆழமாக சிந்திக்கவும் உணரவும் வேண்டும் என விரும்புகிறார்கள் அவர்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் நிறைவேறாமல் போவதால், தனிமை உணர்வு ஏற்படலாம் அவர்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என கருதுகின்றனர் கூட்டத்தில் கலந்துவிடாமல் சொந்த பாதையை பின்பற்ற விரும்புகின்றனர் எதிர்பார்ப்புகளில் இருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள தனிமையை தேர்ந்தெடுக்கின்றனர் இந்த உலகத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட விதமாக சிந்திக்கின்றனர் சில நபர்களுக்கு தனிமை என்பது சுய அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது இருப்பினும் இவர்கள் நல்ல உறவுகளை ஏற்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்