காலையில் 4 அல்லது வயிறு நிறையும் வரை வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும் பெரும்பாலானோருக்கு 2-3 பழங்களை சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும் வாழைப்பழத்தோடு சேர்த்து தண்ணீரும் பருக வேண்டும் மதியமும் இரவும் நீங்கள் விரும்பிய உணவை சாப்பிடலாம் 80% வயிறு நிரம்பியது போல் தெரிந்தால், அதற்கு மேல் சாப்பிடாதீர்கள் இரவு 8 மணிக்கு மேல் எதுவும் சாப்பிடக் கூடாது மதுபானம், பால் பொருட்கள், கஃபைன் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் தண்ணீர் அருந்தவும் இரவில் நன்றாக தூங்கவும் இந்த டயட் பரிந்துரைக்கிறது இதனால் கிடைக்கும் பலன் நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு தேவையான புரதம் கிடைக்காமல் போகலாம் முன்குறிப்பிட்ட டயட்டை மருத்துவ ஆலோசனை இல்லாமல் பின்பற்ற கூடாது