சூயிங்கம் மெல்லுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? உள்ளன.
Published by: பேச்சி ஆவுடையப்பன்
சூயிங்கம் மெல்லுதல் இப்போது ஒரு பழக்கமாகிவிட்டது. இதனால் பல நன்மைகளும் கிடைக்கிறது.
இதனை மெல்லுவது உடலில் கார்டிசோல் அளவைக் குறைக்க உதவுகிறது, இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க உதவுகிறது.
நீங்கள் வேலை செய்யும் போது தூக்கம் வந்தால் சூயிங்கம் மெல்லுவதால் முக தசைகள் சுறுசுறுப்பாக இருக்கும்
சுயிங்கம் மெல்லுவதால் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
சர்க்கரை இல்லாத சூயிங்கம் மெல்லுவதால் வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இது பற்களுக்கு இடையில் சிக்கிய உணவு துகள்கள் மற்றும் அமிலத்தை சுத்தம் செய்கிறது.
தொடர்ந்து மெல்லும் செயல் தாடை தசைகளுக்கு பயிற்சி அளிக்கிறது.
புதினா சுவையுள்ள சூயிங்கம் மெல்லுவதால் சுவாசத்தில் புத்துணர்ச்சி கிடைக்கும் மற்றும் துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைத் தடுக்க உதவுகிறது.
சுயிங்கம் மெல்லுவதால் மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது நினைவாற்றலை மேம்படுத்தும்.
எனினும் சுயிங்கம் ஆபத்தும் நிறைந்துள்ளது என்பதால் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம்