மழைக்காலத்தில் முகத்தை மலர்ச்சியாக வைக்க டிப்ஸ் மழைக்காலம் வந்துவிட்டாலே நம் சருமத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் எண்ணெய் பசை இல்லாமல் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு பலரும் போராடுகின்றனர் தினமும் இரண்டு முறை முகத்தை நன்கு கழுவி சுத்தப்படுத்துவது அவசியம் முகத்திற்கு ஏற்ற மிருதுவான கிளென்சரைப் பயன்படுத்துங்கள் வாரத்திற்கு ஒருமுறை மென்மையான ஸ்க்ரப் பயன்படுத்தி சருமத்தின் இறந்த செல்களை நீக்குங்கள் முகத்தை நன்கு கழுவிய பின் தினமும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள் வெள்ளரிக்காய் துண்டுகளை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற உதவும் மழைநீரில் குளிப்பது நல்லது என்றாலும் நேரடியாக முகத்தில் மழை நீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் மழைக்காலத்தில் அதிக மேக்கப் போடுவதைத் தவிர்த்து இயற்கையான தோற்றத்தை பராமரிக்கவும்