நாம் தினசரி பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலில் சில நாட்களில் கெட்ட வாடை வரும்



இதை நாம் எளிதாக சுத்தம் செய்து சரி செய்யலாம்



வாட்டர் பாட்டிலில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, 1 ஸ்பூன் அரிசி சேர்க்கவும்



மேலும் ஒரு சிறிய எலுமிச்சை துண்டு, கால் டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்



இதை நன்றாக இரண்டு நிமிடம் குலுக்கி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்



பின் இதை நல்ல தண்ணீரில் கழுவி எடுத்தால் பாட்டிலில் அழுக்கு போய் விடும்



இப்போது தண்ணீர் பாட்டிலில் கெட்ட வாடை வீசாமல் இருக்கும்



கல் உப்பு மற்றும் எலுமிச்சை அழுக்கை சுத்தம் செய்து வாடையை நீக்கும்