சின்னதாக ஒரு வேலையைச் செய்தால்கூட உடல் சோர்வு ஏற்படலாம்



நடந்தாலே கை, கால் மூட்டுகளில் வலி, அடிக்கடி ஓய்வெடுக்கத் தூண்டும் மனநிலை



இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம்



இரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 மிக அவசியம்



வைட்டமின்களில் நீரில் கரையக்கூடியவை, கொழுப்பில் கரையக்கூடியவை என இரண்டு வகைகள் உள்ளன



வைட்டமின் பி 12 அசைவ உணவுகளில்தான் அதிகமாகக் கிடைக்கிறது



மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாகக் கிடைக்கும்



சோயாபீன்ஸ், பால், தயிர் ஆகியவற்றில் ஓரளவுக்கு வைட்டமின் பி 12 கிடைக்கும்



வைட்டமின் பி12 சத்துகள் நிறைந்த மாத்திரைகள், மருந்துகள் இருக்கின்றன



மருத்துவரின் ஆலோசனையுடன் வாங்கிச் சாப்பிடலாம்