ஆமை இந்த பூமியில் வாழும் மிகவும் பழமையான உயிரினம்.
பெண் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் நூற்றுக்கணக்கான முட்டைகள் இடும் ஆற்றல் கொண்டவை.
ஆமைகள் கடலில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்யும் ஆற்றல் கொண்டவை. கடல் ஆமைகள் பூமியின் காந்த புலத்தை அறியும் ஆற்றல் கொண்டவை
வெப்பநிலையைப் பொறுத்தே ஆமைகளின் பாலினம் உருவாகிறது. வெப்பம் அதிகரித்தால் பெண் ஆமைக்குஞ்சுகளும், குளிர்ச்சியான வெப்பநிலையில் ஆண் ஆமைக்குஞ்சுகளும் உருவாகிறது.
ஆமைகள் தண்ணீரில் பல மணி நேரம் வரை மூச்சுவிடாமல் தாங்கும் ஆற்றல் கொண்டது. இது நீண்ட நேரம் மூழ்கி இருக்க உதவுகிறது.
ஆமைகள் சுற்றுச்சூழல் காப்பாளர்களாக உள்ளனர். கடல் பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பலமாக உள்ளது. கார்பன் சேமிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆமைக்குஞ்சுகள் தங்களது முட்டையில் இருந்து வெளியில் வரும் முன்பு ஒருவித ஒலி மற்றும் அசைவு மூலம் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன.