வாழ்க்கை என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க டிப்ஸ் இதோ! உங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள் நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும் வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும் ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள். புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இருங்கள் சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்.. சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதீர்கள் அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும் பிரச்சினைகள் வரும் பொழுதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள் தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே நமது உண்மையான நண்பன் எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்