காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு விலை உயர்ந்த கிஃப்ட்ஸ் கொடுக்கமுடியவில்லை என்றால் என்ன? சிறிய கவிதை கூறலாம் அல்லவா?
உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்க சில காதல் கவிதைகள்...
வேரும் மலரும் காதல் கொண்டால் சருகானால்தான் முத்தம் - நேசமித்ரன்
எவ்வளவு இருக்கிறாய்? எடுத்துக் கொள்ளவோ இழந்து போகவோ, போதுமா இந்த ஒரு பொழுது, இந்த ஒரு வாழ்க்கை - மனுஷ்ய புத்திரன்
காதல் என்பது இறையனுபவம், எந்தச் சொற்களாலும் உணர்த்திவிட முடியாதது அது - தேவதேவன்
அவளைக் கண்டதும் மூளைக்கு வாலும் இதயத்திற்கு வாலும் முளைக்குமா? - ஜெ.பிரான்சிஸ் கிருபா
பூமிக்குப் பாரமாக இருக்கிறாய், காதல் செய்து காற்றில் இறகாகு! - யாத்திரி
கலைந்த கூந்தலை நீ வாரிக்கொண்டிருக்கிறாய், ஒழுங்காய் இருந்த என்மனம் கலைகின்றது - கவிக்கோ அப்துல்ரகுமான்
அவன் எழுதும்போது கவிதை காதலாகிறது - கவிஞர் சுகுமாறன்
எப்படி வாசிப்பது, மேலிருந்து கீழாகவா, கீழிருந்து மேலாகவா, உன் உதட்டில் எழுதப்பட்டிருக்கும் கவிதையை - தபூ சங்கர்
உங்கள் காதலை வெளிப்படுத்த சிறந்த மொழி கவிதை மொழிதான். உங்கள் காதலருக்கு நீங்கள் என்ன கவிதை சொல்லப்போகிறீர்கள்?