ஒரு கப் துவரம் பருப்பை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்



பின் 3 கீற்று தேங்காய் துண்டு, 7 பல் பூண்டை சேர்த்து வதக்கவும்



இதனுடன் 3 காய்ந்த மிளகாய், சிறிய துண்டு புளி சேர்க்கவும்



இதையும் ஒரு நிமிடம் வதக்கி இதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும்



இதை 30 நொடி கலந்து விட்டு இறக்கி ஆற வைக்கவும்



இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்



பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்



அவ்வளவுதான் சுவையான துவரம் பருப்பு துவையல் தயார்.



இதை சாம்பார், ராசம் சாதம் உள்ளிட்டவற்றுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்