குளிர்காலம் வந்தாலே முடி வறண்டு போய்விடும். எனவே அதை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்
குளிர்காலத்தில் தலைமுடிக்கு ஷாம்பு மற்றும் கன்டிஷனரைப் பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்தை மீட்டெடுத்து தலைமுடிக்கு பாதுகாப்பு அளிக்க உதவும்
பருவ காலங்களில் தலைமுடியை ஸ்ரைட் செய்வதற்காக அடிக்கடி ஹேர் ட்ரையர் மற்றும் ஸ்ட்ரைட்னர் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
குளிர்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த காற்றினால் தலைமுடியில் பொடுகுத் தொல்லை ஏற்படும்
வெளியில் செல்லும் போது தலையில் தொப்பி அணிந்து செல்லவும்
குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தலாம்
சமையல் அறையில் கிடைக்கும் முட்டை, அவகோடா பழங்கள், ஆலிவ் எண்ணெய் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஹைட்ரேட்டிங் ஹேர் மாஸ்க்கைத் தயார் செய்யலாம்
இயற்கை பொருட்கள் உச்சந்தலையில் ஏற்படக்கூடிய தொற்று நோய் பாதிப்புகளையும் எதிர்த்துப் போராட உதவுகிறது
தலைமுடியைப் பராமரிக்க விலையுயர்ந்த ஷாம்புகள் மற்றும் கன்டிஷனர்கள் தேவை இல்லை