வறுத்த வேர்க்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது பசியை குறைக்கலாம்
வறுத்த வேர்க்கடலையை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளும் போது உடலின் ஆற்றல் சக்தியை அதிகரிக்கலாம்
வறுத்த வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்
வறுத்த வேர்க்கடலையில் அமினோ அமிலங்கள் இருப்பதால் ஒட்டுமொத்த தசை ஆரோக்கியத்தை வலுவாக்கலாம்
வறுத்த வேர்க்கடலையை தினசரி எடுத்துக் கொள்ளும் போது தசை வளர்ச்சியை அதிகரிக்கலாம்
உடற்பயிற்சி செய்வதற்கு முன் வறுத்த வேர்க்கடலை எடுத்துக் கொண்டால் உடல் செயல்பாட்டை அதிகரிக்க உதவலாம்
வறுத்த வேர்க்கடலையில் உள்ள புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமான சக்தியை மேம்படுத்தலாம்
வறுத்த வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்தத்தை சீராக வைக்க உதவலாம்
வறுத்த வேர்க்கடலையில் உள்ள புரதம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுவாக்கலாம்