பரு இல்லாமல் முகம் பளபளன்னு இருக்க இத ஃபாலோ பண்ணுங்க..



சருமத்தில் தேங்கியுள்ள அழுக்கு காரணமாக முகப்பருக்கள் உண்டாகலாம்



சில சமயங்களில் பொடுகாலும் முகப்பரு உண்டாகலாம்



பரு பிரச்சனை உள்ளவர்கள் முடிந்த வரை அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளலாம்

முகத்தை தினமும் குறைந்தது மூன்று முறையாவது தண்ணீரில் சுத்தமாக கழுவினால் பருக்கள் பிரச்சனையை குறைக்கலாம்

மன அழுத்தம் இருந்தாலும் முகத்தில் பருக்கள் தோன்றலாம். அதனால் யோகா, தியானம் செய்யலாம்

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி, உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்

பருக்களைத் தொடுவதை தவிர்க்கவும். பருவை தொடும்போது அந்த பேக்டீரியா மற்ற பகுதிகளுக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்

குளியலுக்கு நாம் பயன்படுத்தும் நாறு, பிரஷ் போன்றவை சுத்தமாக உள்ளதா என உறுதி செய்துக்கொள்ள வேண்டும்