சப்பாத்தி மாவை எவ்வளவு நன்றாக பிசைந்தாலும் அது உப்பலாக வரவில்லையா? ஒரு வெள்ளை காட்டன் துணியில் 6 ஸ்பூன் அரிசி சேர்த்துக் கொள்ளவும் இதை ஒரு கயிறு கொண்டு ஒரு சிறு மூட்டை போன்று கட்டிக் கொள்ளவும் திரட்டிய சப்பாத்தியை தோசைக் கல்லில் போட்டு அது ஒரு பக்கம் வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி விட்டு 10 நொடிக்கு பிறகு, அல்லது அடிப்பகுதியிலும் லேசாக வெந்ததும் நாம் தயார் செய்து வைத்துள்ள அரிசி உருண்டையை கொண்டு சப்பாத்தி மீது ஆங்காங்கே அழுத்தி விடவும் பின் நீங்கள் எண்ணெய் சேர்க்கலாம். இப்படி செய்தால் சப்பாத்தி நன்கு உப்பி வரும்