டின்னரில் இதை சாப்பிட்டால் எடை ஈசியாக குறையும்!

Published by: விஜய் ராஜேந்திரன்

உடல் எடை நோய் அல்ல

உடல் எடை அதிகரிப்பது நோய் அல்ல என்றாலும், அதனால் நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்

இரவு உணவு

உடல் எடையை குறைக்க இரவு உணவை சரியாக சாப்பிட வேண்டும். இரவு உணவை, எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறோமோ அந்த அளவிற்கு, நல்ல பலன் கொடுக்கும்

ஓட்ஸ்

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஓட்ஸ் நல்ல தேர்வாக இருக்கும். ஓட்ஸ் தோசை, ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம்

பச்சை காய்கறிகள்

பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அவற்றில் நார்சத்து அதிக அளவில் உள்ளதோடு, ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன

யோகர்ட்

யோகர்ட் சாப்பிடுவது உடல் எடையை குறைக்கும். இதில் உள்ள பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எலும்புகளை பலப்படுத்துகிறது

பேரிச்சம்பழம்

உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவில் பேரிச்சம்பழம் சாப்பிடலாம். பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பேரிச்சம் பழத்தை சாப்பிடும் முன் பாலில் ஊறவைப்பது நல்லது

எலுமிச்சை

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை பானம் குடிப்பதைப் போலவே, இரவில் எலுமிச்சை பானத்தை குடிப்பதால் செரிமானம் மேம்படும் கொழுப்பை எரிக்க உதவும்

லேசான உணவு

இரவில் லேசான உணவை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுடன், பல உடல்நலக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது

மருத்துவர் ஆலோசனை

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் நோயாளியாக இருந்தால் மருத்துவர் ஆலோசனையை பெற வேண்டும்