கல்லீரல் சிறப்பாக இருக்க சாப்பிட வேண்டியவை; கூடாதவை!

Published by: விஜய் ராஜேந்திரன்

உடலிலுள்ள கழிவு

கல்லீரல் நம்முடைய உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, அனைத்து உறுப்புகளையும் சீராக செயல்பட வைக்கவும்

தொந்தரவு தரும் உணவு

கல்லீரலுக்கு பலத்தை தரக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும், மற்றொன்று, கல்லீரலுக்கு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும்

தவிர்க்க வேண்டியவை

மதுபானம், சிவப்பு இறைச்சி, உப்பு, சர்க்கரை, இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு, வெள்ளை மாவில் செய்யப்படும் ரொட்டி, பீட்சா, பாஸ்தா போன்றவைகளை தவிர்க்க வேண்டும்

காய்கறி

ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காய்கறிகளில் குளுக்கோசினோலேட்டுகள் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உடைத்து கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க உதவும்

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட், எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், ஆப்பிள் சீடர் வினிகர், கீழாநெல்லி அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

மீன்

மீன்களில், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி உள்ளிட்ட ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நிறைந்த மீன்களை எடுத்துக் கொள்ளலாம்

எலுமிச்சை பழம்

தினமும் எலுமிச்சம் பழத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் உணவில் சேர்த்து கொள்ளலாம்.. ஏனென்றால், இந்த பழத்திலிருக்கும் D-Limonene என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் கல்லீரல் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும்

பூண்டு

சமையலில் நிறைய பூண்டு, மஞ்சள் சேர்த்து கொள்ளவேண்டும். பூண்டுகளில் சல்பர் கலவைகள் உள்ளதால், கல்லீரல் என்சைம்களை செயல்படுத்த உதவும்

முழு தானியங்கள்

ஓட்ஸ், பழுப்பு அரிசி, தினை மற்றும் பார்லி போன்ற முழு தானிய பொருட்கள் கல்லீரலுக்கு சிறந்தது