உடலில் நீர்ச்சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/sunnyhealthandfitness

அதிக தாகம்

அதிகளவு தாகமாக இருப்பது நீர்ச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறியாகும். இது உடலுக்கு நீர் தேவைப்படுகிறது என்பதை காட்டுகிறது.

Image Source: Canva

தலை சுற்றல்

குறைந்த ரத்த அழுத்தம், மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதாக இருப்பதாலே தலை சுற்றல் உருவாகிறது. இதுவும் நீர்ச்சத்து குறைபாட்டின் ஒரு அறிகுறியாகும்.

Image Source: Canva

வறண்ட உதடுகள்

நீர்ச்சத்து குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள் உதடுகளில் வெடிப்பு மற்றும் வறண்டு போவது ஆகும். இது உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்பதை குறிக்கிறது.

Image Source: Pinterest/amanglesdenovoa

உடல் சோர்வு

நீர்ச்சத்து போதுமான அளவு இல்லாவிட்டால் உடல் அசதியாக காணப்படும்

Image Source: Pinterest/natmedworld

அடர் நிற சிறுநீர்

சிறுநீர் இயல்பான நிறத்தில் இருந்து வேறு நிறத்தில் வெளியேறினாலும் அது நீர்ச்சத்தின் குறைபாடாக கருதப்படுகிறது.

Image Source: Pinterest/adultpediatricu

மலச்சிக்கல்

நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக மலச்சிக்கல் உண்டாகலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டாலும் இந்த சிரமம் உண்டாகலாம்.

Image Source: Pinterest/allrecipes

இனிப்பு சாப்பிடும் எண்ணம்

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும்போதே அடிக்கடி இனிப்பு பொருட்கள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகலாம

Image Source: Pinterest/youbeautysite

குழி விழுந்த கண்கள்

போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டால் கண்களுக்கு கீழே குழியும், கருவளையமும் உண்டாகும்.

Image Source: Pinterest/zohnabeauty

தசைப்பிடிப்பு

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டால் தசைப்பிடிப்பு உண்டாகும். இது உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைக்கும்.

Image Source: Pinterest/nathaliaao71