அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மன அழுத்தத்தை குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. ஆனாலும். சிலரது உடல்நலத்திற்கு ஏற்றது அல்ல.
ஏராளமான நன்மைகளை கொண்டிருந்தாலும் அஸ்வகந்தாவை சிலர் தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் அஸ்வகந்தாவிற்கு உண்டு. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
மூளை சுறுசுறுப்பைத் தூண்டும் ஆற்றல் கொண்டது அஸ்வகந்தா. தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் அஸ்வகந்தாவைத் தவிர்ப்பது நல்லது ஆகும்.
குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அஸ்வகந்தாவை தவிர்க்க வேண்டும். இது தலை சுற்றல், மயக்கத்தை உண்டாக்கும். ஏனென்றால், அஸ்வகந்தா ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும்.
இயற்கையாக உடலில் குணப்படுத்தும் திறன் கொண்டது இந்த அஸ்வகந்தா. இது ஆக்சிஜனேற்றிகள், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது.
கர்ப்ப காலத்தில் அஸ்வகந்தா சாப்பிடுவது ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. இதனால், அஸ்வகந்தா கர்ப்பிணிகளுக்கு உகந்தது அல்ல.
உங்கள் உடலில் ஏதாவது பிரச்சினை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அஸ்வகந்தாவை பயன்படுத்துவது நல்லது ஆகும்.
தைராய்டு ஹார்மோன் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது அஸ்வகந்தா. இதனால், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது ஆகும்.