தோசை சுடுவது ஈசியான வேலை என்று சொல்வார்கள்



தோசை சுடுவது ஈசிதான் ஆனால் சுவையாக சுடுவது சற்று கடினமான ஒன்று



தோசை முறுவலாக வருவதற்கு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்



தோசை முறுவலாக வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைக்க வேண்டும்



தோசை மாவில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து தோசை சுட்டால் நல்ல மணமாக இருக்கும்



ரவா தோசை மாவில் ஒரு பங்கு கோதுமை மாவு, இரண்டு பங்கு அரிசி மாவு கலந்து தோசை சூட்டால் ரவா தோசை முறுவலாக வரும்



ரவா தோசை செய்யும் போது மாவில் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து தோசை சூட்டால் தோசை முறுவலாக வரும்



தோசைக்கு மாவு அரைக்கும் போது ஒரு கைப்பிடி அளவுக்கு ரவை சேர்த்து அரைத்தால் தோசை சுவையாக இருக்கும்



தோசை பொன்னிறமாக வருவதற்கு, தோசை மாவில் சிறிதளவு கடலை மாவு சேர்க்க வேண்டும்