இறுக்கமான ஜீன்ஸ் அணியும்போது கீழ் உடலில் உணர்வின்மை, நரம்புகள் வீக்கம் ஏற்படலாம்
ஹை ஹீல்ஸ் அணியும்போது உடல் தோரணை மாறுவதால் முதுகெலும்பு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு முதுகுவலி வரும் அபாயம் அதிகரிக்கலாம்
கனமான கைப்பையை தோளில் மாட்டிச் செல்லும்போது தோள்பட்டை மற்றும் கழுத்துவலி ஏற்படும். தசைப்பிடிப்பு, மேல் முதுகில் வலி மற்றும் முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்படலாம்
இறுக்கமான ஷேப் வேர் அணியும்போது ஆசிட் ரிஃப்ளக்ஸ், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் சுவாச பிரச்னைகள் ஏற்படலாம்
கனமான காதணிகள் காது மடலுக்கு சேதத்தை ஏற்படுத்தும். உலோகங்கள் தோலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி எரிச்சல் அல்லது வெடிப்புகளுக்கு வழிவகுக்கலாம்
கனமான பெரிய சன் கிளாஸ்கள் மூக்குக்கும் காதுகளுக்கும் அழுத்தம் தரும். இது அசௌகரியம் மற்றும் தலைவலிக்கு வழி வகுக்கலாம்
தொடர்ந்து பயன்படுத்தும்போது நகங்களை சரியாக பராமரிக்காமல் விட்டால், ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாவை சிக்கவைத்து பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கலாம்
இறுக்கமான பெல்ட், அடிவயிற்றை சுருக்கும். நெஞ்செரிச்சல் வீக்கம் போன்றவை ஏற்படும். உடலின் கீழ் பகுதியில் உணர்வின்மைக்கு வழி வகுக்கலாம்
சரியான முறையில் மேக்கப்பை அகற்றாமல் விடும்போது அது முகத்தில் உள்ள துளைகளை அடைத்து முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தோல் எரிச்சலுக்கு வழிவகுக்கலாம்