உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தம் செய்து சீராக்க மாதத்திற்கு ஒரு நாளை செலவிடுங்கள்
சமைப்பது, நடனமாடுவது, ஓவியம் வரைவது உள்ளிட்ட விஷயத்தில் புதிதாக ட்ரை செய்து பார்க்க ஒரு நாளை ஒதுக்கலாம்
இசை நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள், ஆர்கேட் கேம் விளையாட மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கலாம்
உங்களை புதுப்பித்து கொள்ள ஸ்பா, மசாஜ், ஹேர் கட் போன்றவற்றை செய்ய மாதத்திற்கு ஒரு முறை பார்லருக்கு செல்லலாம்
மாதத்திற்கு ஒரு முறை நண்பர்களுடன் மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிட்ட வெளியே ஹோட்டலுக்கு செல்லலாம். இந்த நாளில் உங்கள் நண்பர்களுடன் பேசி பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்
கடற்கரை, பூங்கா, ரோட் ட்ரிப் செல்ல மாதத்திற்கு ஒரு நாளை ஒதுக்க வேண்டும். இது மனதை புத்துணர்ச்சியாக்க உதவும்
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க ஒரு நாளை ஒதுக்க வேண்டும். இதற்கு டிஜிட்டல் டீடாக்ஸ் என்று பெயர்
உங்களுடன் நீங்களே நேரம் செலவிட மாதத்திற்கு ஒரு நாளை ஒதுக்கினால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்