கொரியர்கள் சாப்பிடும் கிம்ச்சி.. அழகு ரகசியத்திற்கு காரணம் இதுதான்!
August 23, 2024
Published by: பிரியதர்ஷினி
உலகெங்கும் கொரியன் சீரிஸ்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்தவர்கள், கொரியர்களின் உடை, உணவுமுறை, மொழி என அனைத்தையும் பின்பற்றி வருகின்றனர்
அந்தவகையில், கொரியர்கள் சாப்பிடும் கிம்ச்சி மிகவும் பிரபலமான உணவாக இருக்கிறது. இந்த உணவு உடலுக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது
முட்டை கோஸ், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி ஆகியவற்றில் உப்பு காரம் சேர்த்து பதப்படுத்தி வைக்கின்றனர். கிட்டத்தட்ட நம்ம ஊர் ஊறுகாய் போலதான் இது செய்யப்படுகிறது
மற்ற உணவுகளுக்கு சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும் இதில், வைட்டமின் ஏ, சி ஆகியவை இருக்கும்
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை காக்க உதவலாம்
இதில் கிடைக்கும் கால்சியம், இரும்புச்சத்து கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது
இது முகத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாற்றலாம்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இது, பருக்கள், சரும தொற்றுகள், சொரி, அரிப்பு, வீக்கம் ஆகியவற்றை வராமல் தடுக்கலாம்