மாரடைப்பு ஏற்பட்டால் அடுத்த ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது. அந்த நேரத்தில் ஒருவர் தனியாக இருந்தால் சூழல் மோசமடடைகிறது



கடந்த சில வருடங்களில் இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது.



யாருக்கேனும் திடீரென மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டால், அருகில் யாரும் இல்லையென்றால், என்ன செய்ய வேண்டும்?



அமெரிக்க இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெரெமி சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.



மார்பில் அழுத்தம், கைகளில் பலவீனம் அல்லது திடீரென வியர்த்தால், தாமதிக்காமல் ஆம்புலன்ஸை அழையுங்கள். அதற்கான எண்களை எப்போதும் மொபைலில் சேமித்து வையுங்கள்.



உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியாக இருக்கும்போது கதவை மூடாதீர்கள் உதவி செய்பவர்கள் விரைந்து வருவதை தடுக்கும்



நிற்க வேண்டாம். படுத்துக் கொள்ளுங்கள் அல்லது சாய்ந்து உட்காருங்கள். கால்களை உயர்த்தி வைக்க முயற்சி செய்யுங்கள்.



முதலில் ஒரு நம்பகமான நபரை அழைக்கவும், அவரிடம் மனம் திறந்து பேசுங்கள்.



தினமும் நடப்பது, புகைப்பழக்கத்தை தவிர்ப்பது அவசியம்.



உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால் அதிக கவனம் செலுத்துங்கள்.