குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த டிப்ஸ்!
குழந்தைகளிடம் அவர்களின் சிறுவயதிலேயே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது, அவர்களின் வாழ்வுக்கு பெற்றோர் செய்யும் பெரிய நன்மையாகும்.
குழந்தைகளின் மழலைப் பருவத்தில் இருந்தே அவர்களை புத்தக வாசகராக பெற்றோர் வளர்க்க முடியும். தினசரி குழந்தை தூங்கப் போகும் முன் ஒரு சிறுவர் கதை புத்தகத்தை அவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும்
குழந்தைகளை என்னதான் சொல்லி வளர்த்தாலும், பெற்றோர்கள் செய்யும் செயலைப் பார்த்துதான் அவர்கள் வளர்கின்றனர். தினமும் பெற்றோர்களின் வாசிப்பு பழக்கத்தை பார்க்கும் குழந்தைகள், தாமாகவே புத்தகத்தை எடுத்து புரட்டத் தொடங்குவார்கள்.
குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்துச் சென்றால், நிறைய புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது அவர்களுக்கு ஆச்சரியமாகவும், ஆசையாக வும் இருக்கும். வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்துக்கு பெற்றோர் தமது குழந்தையை வாரத்துக்கு ஒருமுறையாவது கூட்டிச் சென்றால், நூலகத்தில் அமர்ந்து படிப் பவர்களை பார்த்தும், புத்தகங்களை பார்த்தும் வாசிப்பு பழக்கம் வரத் தொடங்கும்.
வர்களின் கவனத்தை பெறவும், புத்தக வாசிப்பில் சலிப்பு தட்டாமல் இருக்கவும், அவர்களுக்கு பிடித்த கதைகளை மீண்டும் சொல்லிக் காட்ட அல்லது வாசிக்க வைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எந்த மாதிரியான புத்தகங் களை கொடுக்கிறோம் என்பதை போல, எந்த இடத்தில் புத்தகம் படிக்கிறோம் என்பதும் முக்கியம். புத்தகம் வாசிக்கும்போதோ அல்லது குழந்தைக்கு கதை சொல் லும்போதோ, அறையில் விளையாட்டுப் பொருட்கள், இரைச்சல் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள் கவனம் முழுவதும் புத்தகத்தின் மேல் இருப்பது போன்ற சூழலை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்.
குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற எளிய, பெரிய எழுத்தில், படங்கள் அதிகம் கொண்ட புத்தகங்களை ஆரம்பத்தில் அவர்களுக்கு பெற்றோர் படிக்க கொடுக்க வேண்டும் .
அவர்கள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித் தால் அதை பாராட்டி, பரிசு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.