abp live

மாதவிடாய் கால பராமரிப்பு குறிப்புகள்!

abp live

கோடைகாலத்தில் மாதவிடாய் ஏற்படும்போதுஅதிகப்படியான வெப்பம் பாலிகுலார் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து,மாதவிடாய் ரத்தப்போக்கை நீட்டிக்க செய்யும். இதனால் உடலில் சோர்வு, நீரிழப்பு, சீரற்ற ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

abp live

3 மணி நேரத்திற்கு ஒரு முறை சானிட்டரி பேடுகளை மாற்றுவது அவசிய மானதாகும்.

abp live

வெப்பம் அதிகரிக்கும் கோடை காலத்தில் பருத்தி உடைகளை அணிவது நல்லது. இதன் மூலம் வியர்வை எளிதாக உறிஞ்சப் படும். சருமம் தடையின்றி சுவாசிக்க முடியும்.

பழங்கள், ஆரோக்கியமான உணவுகல் அதிகம் சாப்பிடலாம்.

இறுக்கமான ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்றவற்றை மாதவிடாய் நேரத்தில் அணிவதைத் தவிர்க்க வேண்டும். தளர்வான ஆடைகள் அணிந்தால் காற்றோட்ட லாக இருக்கும்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் சத்துள்ள உணவு சாப்பிடுவது முக்கியமானது. உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.

பழச்சாறுகளில் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. மாதவிடாய் நேரத்தில் சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே எண்ணெய் யில் வறுத்த மற்றும் உப்பு அதிகம் சேர்த்த பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் நாட்களை சமாளிப் பதற்கு யோகா, தியானம், மூச் சுப் பயிற்சிகள், லேசான உடற் பயிற்சிகள், இயற்கையான சூழலில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி ஆகியவை உதவும்.

கோடைகால மாதவிடாய் நாட்களில் கோபம், எரிச்சல்,சோம்பல் போன்ற உணர்வு கள் ஏற்படுவது இயற்கையானது. எனவே இது குறித்து குடும்பத்தினருக்கு தெரிவித்து அவர்களின் ஆதரவை பெறுவது அவசியம்.