தலைமுடி அழகாக இருக்க நெல்லிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க!
Published by: விஜய் ராஜேந்திரன்
நெல்லிக்காயை பல்வேறு விதங்களில் நீங்கள் பயன்படுத்தி உங்களின் தலைமுடி சார்ந்த சிக்கல்களை தீர்க்கலாம்
நெல்லிக்காயை மற்ற பொருள்களுடன் சேர்த்து வெவ்வேறு முறையில் பயன்படுத்தலாம்
நெல்லிக்காய் தூள், சீயக்காய் பொடி மற்றும் சோப்பு கொட்டை தூள் ஆகியவற்றை சம அளவு தண்ணீரில் சேர்த்து தலைமுடியில் தடவி, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்து தலைக்கு குளிக்கலாம்
தலையில் ஏற்படும் அலர்ஜி காரணமாக முடி உதிர்தல் அதிகமாகும். எனவே, இதனை தடுக்க நெல்லிக்காயுடன் தேனை சேர்த்து பயன்படுத்தலாம்
நெல்லிக்காய் பொடியுடன் தேனை கலக்கி உச்சந்தலையில் தடவி வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்து தலையை அலசிவிடவும்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். பாதாம் எண்ணெயில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் தலைமுடியை வலுவாக்கும்
நெல்லிக்காயை சாறை பிழிந்து, அதில் பாதாம் எண்ணெயை கலந்து மிதமாக சூடுபடுத்தி தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டு 15 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும்
நெல்லிக்காய் சாறுடன் எலுமிச்சை சாறையும் கலக்கவும். இதனை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் காயவிட்டு பிறகு குளிக்க வேண்டும்
கறுவேப்பிலையில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. நெல்லிக்காய் பொடியுடன் வெந்தய பொடி கறிவேப்பிலை பொடி சேர்த்து தலையில் தடவி குளிக்கலாம்