ஒரு கி.மீட்டர் நடைபயணம் செல்வது என்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.
ஒருவரின் நடக்கும் வேகம் என்பது அவரது உயரம் மற்றும் எடையைப் பொறுத்து மாறுபடும். அதற்கேற்ப நடக்கும் அடிகளும் மாறுபடும்.
நடைபயிற்சி செய்யும்போது நடக்கும் வேகம் மிகவும் முக்கியமாகும். நடக்கும் வேகத்தை சற்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டியது அவசியம்.
ஒரு கிலோமீட்டர் நடைபயணம் என்பது 1200 முதல் 1500 படிகள் ஏறுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது. இது ஒருவரின் உயரம் மற்றும் வேகத்தைப் பொறுத்து மாறுபடும்.
உயரமானவர்கள் நடக்கும்போது அவர்களது அடி மிகவும் அதிகமாக இருக்கும். உயரம் குறைவானவர்களின் அடி குறைவாக இருக்கும். இது நடக்கும் வேகத்தை மாற்றும்.
உயரம் குறைவானவர்களுக்கு அதிக அடிகள் தேவைப்படலாம். அவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவு அடைய 1500 படிகள் வரை எடுத்துக்கொள்ளலாம்.
அடி நீளத்தைப் பற்றி பேசினால் ஒரு சாதாரண மனிதனின் நடை அடி சுமார் 25 முதல் 28 அங்குலங்கள் 6371 செமீ இருக்கும் இது உயரம் கால் நீளம் நடை வேகம் மற்றும் நடக்கும் பாணி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்