சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை இயற்கையான முறையில் கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி உதவும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது.
வீட்டில் உள்ள மசாலா பொருளான கிராம்பு நீரிழிவு நோயை எப்படி கட்டுப்படுத்த உதவும் என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
கிராம்பு உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒன்று. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
குடல் ஆரோக்கியமான இருந்தால் உடல்நலனும் அதற்கேற்றவாறு இருக்கும். நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு செரிமான மண்டலம் சீராக இயங்காது.
சீரற்ற இரத்த சர்க்கரை அளவு வயிற்று பகுதியில் உள்ள நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தில் செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.
கிராம் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு உதவும்.
ஃப்ரி ராடிகல் இருந்து உடலில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க உதவும்.
கிராம்பு டீ இன்சுலின் சென்சிடிவிட்டை அதிகரிக்கும். இது நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்து ஓர் நிலையாகும்.
தேவையான கிராம்புகளை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து காற்று புகாத டப்பாவில் ஸ்டோர் செய்து வைக்கலாம்.
கிராம் டீ தயாரிக்க ஒரு டம்பளர் தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் கிராம் பொடி சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும். அதை வடிக்கட்டி தேன் கலந்து குடிக்கலாம்.