வியர்க்குருவை வந்த இடம் தெரியாமல் போக்க டிப்ஸ்! குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் வியர்க்குரு போகலாம் கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும் காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும் பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும் அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம் இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் எடுத்துக்கொள்ளலாம் நுங்கு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் வியர்க்குரு நீங்கும் கற்றாழையின் ஜெல்லை தேய்த்துக் குளித்தால் வியர்வை பிரச்னை நீங்கும் உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்க்கலாம்