ஞாபக மறதி வராமல் இருக்க இப்போது இருந்தே இதை செய்யுங்க! ஞாபக மறதி என்பது 55 அல்லது 60 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான் சிலர் தங்களது வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியை மிகவும் இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள் நினைவாற்றலை வளர்க்க ஞாபகமாக சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் இட்டு, ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்ளலாம் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கலாம் நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பவர்களுடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வர வேண்டும் ஒமேகா 3 நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மத்தி, நெத்திலி, கெளுத்தி மற்றும் சால்மன் வகை மீன்களில் உள்ளது