பீன்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
பீன்ஸ் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால், எடையை குறைக்க உதவுகிறது.
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்தது இந்த பீன்ஸ்.
நார்ச்சத்து இந்த பீன்ஸ் அதிகளவில் உள்ளது.செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பீன்ஸில் வைட்டமின் பி அதிகளவு உள்ளது. நரம்பு மண்டல ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதில் இந்த பீன்ஸ் உள்ளது. கொழுப்பு குறைவாகவும், கிளைசெமிக் குறியீடு குறைவாகவும் உள்ளது.
பீன்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால், இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.
ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ள இந்த பீன்ஸ் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கலில் இருந்து பாதுகாக்கிறது.