இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இஞ்சி செரிமானத்திற்கு உதவும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட செரிமான பிரச்சனைகள் ஏற்படாது.
தலைசுற்றல் வாந்தி மயக்கம் பிரச்சனை இருந்தால் இஞ்சி சாறு குடித்துவர குணமாகலாம்.
இஞ்சியில் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகியவை உள்ளதால் இது புத்துணர்ச்சி அளிக்கும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு உணர்வு ஏற்படும்.
இதய ஆரோக்கியத்திற்கு இஞ்சி மிகவும் நல்லது. இதயதுக்கு ரத்தத்தை ஒழுங்காக அனுப்ப உதவுகிறது.
சமையலில் சிறிய துண்டு அளவு இஞ்சி சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்பதுடன் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இஞ்சி செரிமானத்திற்கு உதவுவதால் பசியை தூண்டும். பசி எடுக்கவில்லை என்பவர்கள் இஞ்சி சாறு குடித்து வர சரியாகும்.
ஒரு துண்டு இஞ்சி, சிறிதளவு ஃப்ரெஷ் மஞ்சள் இரண்டையும் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உணவு சாப்பிட்டுவிட்ட திருப்தி உணர்வைத் தரும் என்பதால் நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது.