முகம் பளபளக்க ப்ரூட் ஃபேசியல் இதோ!

Published by: பிரியதர்ஷினி

பழங்களில் இயற்கையாகவே சருமத்தை பிரகாசமாக்கும் ஆண்டி ஆக்சிடென்ட்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களைக் கொண்டு, முகத்தையும் பொலிவு பெறச்செய்யலாம்

ஒரு அவகேடோ மற்றும் கிவி பழத்தை மசித்து கிரீம் போல் ஆக்கி அதை முகத்தில் அரை மணிநேரம் தடவி, வெது வெதுப்பான நீரில் கழுவவும்

வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு கரண்டி தேன், ஒரு கரண்டி மஞ்சள் சேர்த்து பசைபோல தயாரித்து முகம், கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் விட்டு கழுவவும்

ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்து அதில் ஒரு கரண்டி தேன் சேர்த்து முகம், கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்

ஆரஞ்சு பழத்தை மசித்து அதில் ஒரு கரண்டி மஞ்சள், ஒரு கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதை முகம் கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் வைத்திருந்து பின் சுத்தம் செய்யவும்

தர்பூசணியை எடுத்து மசித்து அதில் ஒரு கரண்டி தேன், ஒரு கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து முகம், கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவவும்