Pressure Cooker-ல் சமைக்கும்போது வெப்பமும் அழுத்தமும் அதிகமாக இருக்கும். அதனால் சில உணவுகளின் தன்மை, சுவை, சத்து என அனைத்தும் மாறிவிடும். அதுவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதிக அழுத்தத்தில் சமைக்கும்போது மீன் குழைந்துவிடும். இதனால் சுவை மாறுவது மட்டுமின்றி மீனில் உள்ள கொழுப்பு சத்துகளும் தன்மை இழக்கின்றன.
அரிசியை அழுத்தம் கொடுத்து சமைக்கும்போது அதிலுள்ள மாவுச்சத்துகள் Acrylamide எனும் அமிலத்தை சுரக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.
Pressure Cooker-ல் சமைக்கும்போது கீரை அதன் தன்மையையும் ஊட்டச்சத்தையும் இழக்கிறது. எப்போதும் கீரையை மிதமான வெப்பத்தில் சமைக்கவும்.
அரிசியை போலவே உருளைக்கிழங்கிலும் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் அழுத்தம் கொடுத்து சமைக்க கூடாது.
காய்களை மிதமான சூட்டில் திறந்த பாத்திரங்களில் சமைக்க வேண்டும். அழுத்தத்தில் சமைத்தால் அதன் ஊட்டச்சத்துகள் பாதிக்கப்படும்.
பால் பொருட்களை அழுத்தம் கொடுத்து சமைக்கும்போது அதன் தன்மை, சுவை மாறிவிடும். சில சமையங்களில் திறைந்து விடும்.
முட்டையை Pressure Cooker-ல் அவிக்காதீர்கள். அது உங்கள் சமையலையும் முட்டையையும் வீணாக்கிவிடும்.