தப்பி தவறியும் இந்த உணவுகளை பிரிட்ஜில் வைக்காதீங்க!

Published by: பிரியதர்ஷினி

உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு :

இவற்றை பிரிட்ஜில் வைத்தால் முளை விட ஆரம்பிக்கும். அத்துடன், பூஞ்சை வளர அதிக வாய்ப்புள்ளது

காபி :

காபியை பிரிட்ஜில் வைத்தால், பிரிட்ஜில் இருக்கும் மற்ற பொருட்களின் சுவையை அது பெற்று விடும். அதனால் காபியை ஃபிலாஸ்கில் வைக்கலாம்

தக்காளி :

குளிர்சாதனப்பெட்டியில் தக்காளியை வைக்கும் போது அவற்றின் சுவை மாறுபடும்

தேன் :

காலத்திற்கும் கேட்டுப்போகாத தேனை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அழகாக ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்று வைக்கலாம்

ரொட்டி :

ரொட்டியை பிரிட்ஜில் வைத்தால் ஒருவிதமான ஈரப்பதம் ஏற்படும். இது ரொட்டியின் தன்மையை மாற்றும்

எண்ணெய் :

தேனை போல ஆலிவ், தேங்காய் மற்றும் பிற சமையல் எண்ணெய்கள் பிரிட்ஜில் வைத்தால் கெட்டியாகிவிடும். அதனால் அதை தவிர்க்கலாம்

மெலான் பழங்கள் :

தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து கொண்ட பழங்களை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும்

அவகேடோ :

காயாக இருக்கும் அவகேடோவை பிரிட்ஜில் வைத்தால் அது பழுக்க பல நாட்களாகும். அதனால், அதை வெளியே வைக்கவும்

வெங்காயம் :

காய்கறி கூடையில் வெங்காயத்தை போட்டு வெளிப்புறத்திலே வைக்கலாம்