மசக்கை கர்ப்பகாலத்தில் பெரும்பாலான பெண்களை பாதிக்கிறது
கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் முக்கியமான தருணம்
புதிய மாற்றங்கள் கருவுறும் பெண்களின் வாழ்வில் உற்சாகத்தை ஏற்படுத்தும்
மசக்கை பெரும்பாலான கர்ப்பிணிகளை பாடாய் படுத்துகிறது
காலையில் எழுந்த உடன் சோர்வு, வாந்தி, குமட்டல், மயக்கம் ஏற்படும்
போதிய அளவு தண்ணீர் குடிப்பதை மறக்கக் கூடாது
உண்ணும் அளவை ஆறு பகுதியாகப் பிரித்து, அவ்வப்போது சாப்பிடலாம்
சர்க்கரை அல்லது இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதைக் குறைக்கவும்
எலுமிச்சை,புதினா வாசனையை நுகர்வதும் பெரிதும் உதவியாக இருக்கும்