இந்த குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமாம்!



உடல் பருமனாக இருந்தால் மாலை 6 மணி - இரவு 10 மணிக்குள் உடற்பயிற்சி செய்தால் எடை குறைய வாய்ப்புள்ளது



இந்த ஆய்வை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்



மாலை நேர உடற்பயிற்சி, பருமனான உடல் கொண்டவர்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது



இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், இதய நோயால் ஏற்படும் மரணத்தின் அபாயம் குறையலாம்



மாலை நேர உடற்பயிற்சி சுவாச அமைப்பை மேம்படுத்துகிறது



இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்குமாம்



இந்த நேரத்தில் வாக்கிங், நீச்சல் பயிற்சி, நடனம் ஆடுவது போன்ற மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்



ஜாக்கிங், ஹைக்கிங் செய்யலாம் அல்லது கால்பந்து, கூடைப்பந்து போன்ற தீவரமான பயிற்சிகளில் ஈடுபடலாம்



உங்கள் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பின் இந்த நேரத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம்