முட்டை ஓட்டை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா?



பொதுவாக சமைத்து முடித்துவிட்டு முட்டை ஓடுகளை தூக்கி எரிந்துவிடுவோம்



கத்திரிக்கோல் சரியாக வெட்டவில்லை என்றால் முட்டை ஓடுகளை சிறு துண்டுகளாக நறுக்கினால் கத்திரிக்கோல் கூராகிவிடும்



முட்டை ஓடுகளை சின்னதாக நறுக்கி பாத்திரம் விலக்க பயன்படுத்தலாம்



இந்த ஓடுகளை, சோப்போடு சேர்த்து பாத்திரம் விலக்கினால் அடி பிடித்த கறைகள் நீங்கும்



மிக்ஸி ஜார் பிளேடில் உள்ள சிறு கறைகளை போக்க முட்டை ஓடுகளை பயன்படுத்தலாம்



ஜாரில் போட்டு சிறிதளவு பாத்திரம் விலக்கும் லிக்விட் சேர்த்து அரைத்தால் ஜார் பளபளப்பாக இருக்கும்



முட்டை ஓட்டில் கால்சியம், ப்ரோட்டீன் உள்ளது. இதை மாவு பதத்தில் அரைத்து பறவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்



தோட்டம் வைத்திருந்தால் முட்டை ஓடுகளை அந்த செடிகளுக்கு உரமாக போடலாம்



நாய் வளர்ப்பவர்கள் இதை பொடியாக அரைத்து நாய்கள் சாப்பிடும் உணவுகளில் கலந்து கொடுக்கலாம்