கருத்துப்போன பித்தளைப் பாத்திரங்களை எளிமையாக பளிச்சிட செய்யலாம் இதற்கு எலுமிச்சைப் பழத்தோலும் பேக்கிங் சோடாவும் போதுமானது எலுமிச்சை தோலின் உட்பகுதியில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்கவும் இதைக் கொண்டு பித்தளை பாத்திரத்தை தேய்க்க வேண்டும் பாத்திரத்தின் அனைத்து பகுதிகளிலும் படும்படி தேய்த்து கொடுக்கவும் பின் இதை தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும் இப்போது பித்தளை பாத்திரம் பளிச்சென மின்னும்