நம்மில் பெரும்பாலானோருக்கு உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் சிலர் தயிரோடு சர்க்கரை சேர்த்து ஆசையோடு சாப்பிடுவார்கள் ஒரு சிலருக்கு தயிருடன் உப்பு சேர்க்காவிட்டால் அதனை தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள் தயிர் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பன்மடங்கு நன்மைகளை சேர்க்கிறது தயிருடன் சிறிய அளவு உப்பு சேர்த்து சாப்பிடுவதால் நமது உடலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது அதிகப்படியான உப்பு சேர்த்து சாப்பிடுவது நமது உடலில் சளி உற்பத்தியை அதிகரிக்கலாம் கடைகளில் இருந்து பெறப்படும் தயிரில் கொழுப்பு இருக்காது வீட்டில் தயாரிக்க கூடிய தயிரில் ஏராளமான கொழுப்பு சத்து இருக்கும் தயிருடன் அதிக உப்பை ஒன்று சேர்த்து சாப்பிடுவது இளநரை, முகப்பரு, தலைமுடி உதிர்வு போன்றவை ஏற்படலாம் வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிருடன் மிகச் சிறிய அளவு உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது