ஊற வைத்த 15 பாதாமை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும் அரைலிட்டர் பாலை காய்ச்சி கொதி வந்ததும் 4 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும் குங்குமப்பூ சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் பாதாம் பேஸ்ட்டை சேர்த்து கொதிக்க விடவும் கஸ்டர் பவுடரை 100மிலி பாலில் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்த்து லேசாக திக்காகும் வரை காய்ச்சவும் அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது சர்க்கரை சேர்க்கலாம் பின் இறக்கி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம் இந்த பாதாம் மில்க் ஷேக் வெயிலுக்கு இதமாக இருப்பதுடன் ஜில்லென்று இருக்கும்