உலகில் வாழும் 9 அழகான மற்றும் வண்ணமயமான பூச்சிகள் தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Canva

கிரைசினா ஆரிகன்ஸ்

கோஸ்டாரிகாவில் இருக்கும் ஆபரண வண்டு தங்க நிறத்தில் மின்னுகிறது, இது பூமியில் உள்ள மிக அழகான பூச்சிகளில் ஒன்றாகும்.

Image Source: Canva

ஆர்கிட் மான்டிஸ்

டேஃபோடில் போன்ற ஆர்க்கிட் பூவை ஒத்திருப்பதால், இந்த மாண்டீஸ் பூச்சிகள் கண்களை கவரும்.

Image Source: Canva

ரோஸி மேப்பிள் மோத்

இந்த சின்ன பட்டாம்பூச்சி பஞ்சு மிட்டாய் நிறங்களில் மின்னுவது பார்ப்பவர்களை வியக்க வைக்கும்

Image Source: Pinterest/ TonE370

துக்க ஆடை பட்டாம்பூச்சி

மென்மையான மெரூன் நிற இறக்கைகள் பொன்னிற மஞ்சள் மற்றும் பிரகாசமான நீல புள்ளிகளால் அலங்கரிக்கப்பட்டு வட அமெரிக்கா மற்றும் யூரேசியாவில் இந்த பட்டாம்பூச்சியை தனித்துவமாக்குகிறது.

Image Source: Pinterest/ Houzz

தும்பிகள்

நீல நிறம், சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு போன்ற பளபளப்பான வண்ணங்களில் தட்டான்கள் நம் பகுதிகளில் காணலாம்.

Image Source: Canva

கண்ணிப்பூச்சி வண்டு

சின்னஞ்சிறு வண்டான லேடிபக் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற ஓடும், கருப்பு புள்ளிகளும் கொண்டது. இது பார்க்க அழகாக இருப்பதுடன், தோட்டத்திற்கு இயற்கையான பாதுகாப்பாகவும் விளங்குகிறது.

Image Source: Canva

வெட்டுக்கிளி

இந்த பிரகாசமான பச்சை பூச்சி ஒரு புதிய இலையைப் போலவே இருக்கிறது, எனவே இது தாவர வாழ்க்கையில் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாததாக உள்ளது.

Image Source: Canva

மின்மினிப் பூச்சிகள்

இதமான இரவுகளை வசீகரிக்கும் பச்சை அல்லது மஞ்சள் விளக்குகளால், மின்மினிப் பூச்சிகள் அவற்றின் இயற்கையான ஒளிர்வால் மயக்குகின்றன.

Image Source: Canva

வெல்வெட் எறும்பு

அதன் பெயருக்கு மாறாக இந்த சிவப்பு-கருப்பு நிற ரோம வண்டு சிறகுகள் இல்லாதது. இது வலி மிகுந்த கொடுக்கு தன்மையாலும் தோற்றத்தாலும் வேறுபடுகிறது.

Image Source: Canva