வயிற்றுப்போக்கு : அறிகுறிகளும் தடுப்பு நடவடிக்கைகளும்



மழைக்காலம் நெருங்கி வருவதால் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது



மலேரியா போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலில், அண்மைக்காலமாக நாடு முழுவதும் வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது



குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்



வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் ,குமட்டல் ,வாந்தி,காய்ச்சல்,மலத்தில் ரத்தம் ,மலத்தில் சளி ஆகியவை வயிற்றுப்போக்கின் அறிகுறிகள்



தொடர் வயிற்றுப்போக்கு என்பது வயிற்று தொற்று மற்றும் குடல் நோய்களின் அறிகுறியாகும்



திறந்த வெளியில் மலம் கழிக்க அனுப்பினால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது



நொறுக்குத் தீனிகள் மற்றும் தெரு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்



எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்



வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், காய்ச்சிய தண்ணீர், மோர், பார்லி போன்ற திரவங்களை அதிகம் குடிக்கலாம்



வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்