தினமும் 10 நிமிடங்கள் அழுதால் இவ்வளவு கலோரிகள் குறையுமா?



கண்ணீர் விடுவது என்றாலே சோகமான விஷயம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்



ஆனால் அழுவது உடலுக்கு மிகவும் நல்லதென்று சொன்னால் நம்ப முடியுமா?



சிரிக்கும்போது கலோரிகள் எரிக்கப்படும் என்பது நமக்குத் தெரியும்



அழும்போதும் கிட்டதட்ட அதே அளவு கலோரிகள் எரிக்கப்படுகிறதாம்



பொதுவாக உடற்பயிற்சி செய்தால் கலோரிகள் எரிக்கப்படும் என்று சொல்வார்கள்



ஆனால் அழுதால் கூட உடல் எடை குறையுமாம்



10 நிமிடம் அழுதால் பத்து முதல் 13 கலோரிகள் வரை எரிக்கப்படுமாம்



அதற்காக வேண்டுமென்று அழத் தேவையில்லை



ஆனால் உணர்ச்சித் தாக்கத்தால் அழுகை வந்தால் அதை கட்டுப்படுத்தவோ அடக்கிக் கொள்ளவோ தேவையில்லை